Paiyan Kathaikal / பையன் கதைகள்
-
₹365
- SKU: SA0040
- ISBN: 9788126050147
- Translator: M.Kalaiselvan
- Language: Tamil
- Pages: 760
- Availability: In Stock
பையன் கதைகள்
'ஒளி வீசும் கண்கள் படைத்த பையன்! எண்ணெய் மின்னும் முகத்தில் எப்போதும் ஒரு தியாகியின் பாவம்! ஒவ்வொரு நிமிடமும் அவசியமின்றி மரணிப்பது போலவும், எத்தனைமுறை மரணித்தாலும் அதைப் புரிந்து கொள்ளமுடியாதது போலவும் ஒரு பாவனை. கற்பனையில் ஓர் இரும்புச் சிலுவையைத் தூக்கிச் சுமப்பது போன்ற உணர்ச்சி
வெளிப்பாடு' இவன்தான் பையன். பையனுக்கும், பையன் கதைகளுக்கும் மலையாள மண்ணில் தனியோர் இடமுண்டு. 1982ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற 'பையன் கதைகள்' சிறுகதைத் தொகுப்பில் பையனை
மையமாகக்கொண்டு கதைகள் புனையப்பட்ட 73 இடம்பெற்றுள்ளன. மலையாள இலக்கியத்தில் ‘நகைச்சுவைச் சக்ரவர்த்தி' என்று போற்றப்படும் வி.கெ.என். இக்கதைகளில் இலக்கியம் - வெளியுறவு - அரசியல் அரசியல் - ஆகிய துறைகளில் ஊடுருவியுள்ள குற்றம் குறைகளை அங்கதச் சுவை மிளிர அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.
இந்நூலை எளிமையான தமிழில் மொழி பெயர்த்துள்ள மா. கலைச்செல்வன் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது கல்பாக்கம் அணுவாற்றல் மத்தியப் பள்ளியில் தமிழாசிரியராகப் துறை பணியாற்றி வருகிறார்.

